முகப்பேர்: நில மோசடி.. ஒருவர் கைது

590பார்த்தது
முகப்பேர்: நில மோசடி.. ஒருவர் கைது
முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான, ஆவடி அருகே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,842 சதுர அடி நிலத்தை, துரைபாண்டி, ராஜேஷ், எட்வின், கோபி, அபுல் அசன் குத்துாஸ், கலீலுார் ரஹ்மான் ஆகியோர் போலியான ஆவணங்கள் தயார் செய்து மோசடி செய்துள்ளனர். இது குறித்து ஆனந்தகுமார் அளித்த புகாரின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மோசடிக்கு உடந்தையாக இருந்து, சாட்சி கையெழுத்திட்டு தலைமறைவாக இருந்த வெங்கடேசன் என்பவரை தனிப்படை போலீசார் மே 21 அன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி