திருவள்ளூர்: மின்வாரிய ஊழியர் போல் நடித்து சிறுமிக்கு தொல்லை.. ஒருவர் கைது

726பார்த்தது
திருவள்ளூர்: மின்வாரிய ஊழியர் போல் நடித்து சிறுமிக்கு தொல்லை.. ஒருவர் கைது
திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்வாரிய ஊழியர் எனக் கூறிக்கொண்டு வீடு ஒன்றில் புகுந்த மர்மநபர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மின்வாரிய ஊழியர் போல் நடித்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாலாஜி (36) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி