அதிகபட்சமாக பொன்னேரியில் 206 மில்லி மீட்டர் மழை பதிவு

3பார்த்தது
அதிகபட்சமாக பொன்னேரியில் 206 மில்லி மீட்டர் மழை பதிவு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொன்னேரி பகுதியில் அதிகபட்சமாக 206 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கும்முடிபூண்டியில் 169 மி.மீ., செங்குன்றத்தில் 185.4 மி.மீ., சோழவரத்தில் 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆவடியில் 92 மி.மீ., திருவள்ளூரில் 55 மி.மீ., பூவிருந்தவல்லியில் 55 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தாமரைப்பாக்கத்தில் 47 மி.மீ., பூண்டியில் 24 மி.மீ., ஜமீன் கொரட்டூரில் 38 மி.மீ., ஊத்துக்கோட்டையில் 19 மி.மீ., பள்ளிப்பட்டில் 5 மி.மீ., திருத்தணியில் 4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆர்கே பேட்டையில் மழை பதிவாகவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 1053.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 70.2 சென்டிமீட்டர் ஆகும்.

தொடர்புடைய செய்தி