சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக, பொன்னேரி அருகே புதுவாயல் பகுதியில் 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மிட்சுபிஷி ஏசி மற்றும் கம்ப்ரஷர் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார். இந்தத் தொழிற்சாலை 2100 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கும். ஆண்டுக்கு 3 லட்சம் குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் 6.5 லட்சம் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி செய்யும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.