காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்பு

0பார்த்தது
காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்பு
திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வினோத்குமார் (26), நான்கு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் ஒரு கை இழந்தவர். கடந்த 20ம் தேதி வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், திருவள்ளூர் அருகே போளிவாக்கம் டாஸ்மாக் கடை அருகேயுள்ள சுண்ணாம்பு குளத்தில் வினோத்குமார் சடலமாக கிடந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது மர்ம மரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.