உங்களுடன்ஸ்டாலின்திட்டம் காணொளிகாட்சி தூங்கிவழிந்த எம்எல்ஏ

2பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் "உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10000 முகாம்கள்" மூலம் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பயன்களை வழங்குவதை காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டார். திருவள்ளூர் அடுத்த ஒண்டி குப்பத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் காணொலியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திருவள்ளூர் திமுக எம்எல்ஏ வி. ஜி. ராஜேந்திரன் தூங்கி வழிந்ததும், அமைச்சர் சா. மு. நாசர் மற்றும் மாவட்ட கலெக்டர் மு. பிரதாப் ஆகியோர் பேசிக்கொண்டிருந்ததும், அதிகாரிகள் செல்போனில் நோண்டிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும், படம் பார்த்துக் கொண்டும் அலட்சியமாக இருந்ததும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி