உத்தரப்பிரதேச மாநிலம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மபொசி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ராகேஷ் குமார் (37) என்பவர், சிப்காட்டில் உள்ள காப்பர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று பணி நேரத்தில் காப்பர் மூட்டைகள் அவர் மீது சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்தார். சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.