திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கோரை குப்பம் மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க சென்ற 4 படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து. மகேஷ் குமார், அஜித் அருள் மகாலிங்கம், குமார் ராஜி ஆகியோருக்கு சொந்தமான மீன்பிடி படகுகள் கவிழ்ந்து மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கிய நிலையில் மீட்பு பணிகளில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். கடல் பகுதியில் அலை சீற்றம் தொடர்ந்து அதிகரித்து உள்ளதால் மீனவர்கள் படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.