ஆர். கே. பேட்டை அடுத்த அஸ்வரேவந்தாபுரத்தில், கடந்த 26ம் தேதி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. தொடர்ச்சியான மின் தடையால் குடிநீர் தொட்டிகளுக்கு மின் மோட்டார்கள் இயங்காததால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் மக்கள், நேற்று சோளிங்கர் - சித்துார் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.