திருவள்ளூரில் 22ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

2பார்த்தது
திருவள்ளூரில் 22ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 22ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 250க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளன. முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களும், வேலை தேடுவோரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.