பொன்னேரியை சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் ஹரி (35) இருசக்கர வாகன கடன் தொடர்பாக நிதி நிறுவன ஊழியர்கள் ஆபாசமாக பேசியதால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று தாய் வீட்டிற்கு சென்ற மனைவி வீடு திரும்பியபோது ஹரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது கையில் எழுதப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்ததில், நிதி நிறுவன ஊழியர்களின் ஆபாச பேச்சு பதிவுகள் கண்டறியப்பட்டன. பொன்னேரி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.