குடிநீர்விநியோகம் செய்யாததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

526பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏ ரெட்டியபாளையம் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை ஓரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் விநியோகம் செய்யாதது குறித்து பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓரிரு நாட்களில் குழாய் சரிசெய்து குடிநீர் விநியோகிக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி