கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையத்தின் பரிதாப நிலையை கண்டு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மக்களை ஆபத்தில் இருந்து காக்கும் தீயணைப்பு நிலையம், பாதுகாப்பற்ற சூழலில் இயங்கி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, உடனடியாக நிதி ஒதுக்கி, தீயணைப்பு நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.