தக்கோலம்: கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு

576பார்த்தது
தக்கோலம்: கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு
தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகே கடந்த சில ஆண்டுகளாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. தற்போது, ஆற்றில் நான்கு இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால், கொசஸ்தலை ஆறு சீரழியும் அபாய நிலையில் உள்ளதாகவும், நீரோட்டம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மணல் திருட்டும், ஆற்றின் வழித்தடம் சேதப்படுத்துவதும் தொடர்வதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி