திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆரம்பாக்கம் ஊராட்சி நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் பொதுவுடைமை வாதியான சிங்காரவேலரின் 167வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் மீனவர்கள் சிங்காரவேலரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.