மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சாலைகளில் நாய்கள் விரட்டி விரட்டி கடிப்பதால் அச்சமடைந்த பொதுமக்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குழந்தைகள் சாலைகளில் விளையாட முடியாத சூழல் மட்டுமின்றி பள்ளிக்கு கூட அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.