திருவள்ளூர்: ரூ.5.98 கோடியில் தடுப்பணை

0பார்த்தது
திருவள்ளூர்: ரூ.5.98 கோடியில் தடுப்பணை
திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணை கட்டுமானப் பணிகள் நீா்வளத்துறை அதிகாரிகளால் தொடங்கப்பட்டுள்ளன. கடம்பத்துாா் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, 72 கி.மீ தூரம் ஓடி வங்கக் கடலில் கலக்கிறது. இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தி, விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் தடுப்பணை அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பேரம்பாக்கத்தில் 85 மீட்டா் நீளமும், ஒன்றரை மீட்டா் உயரத்தில், இருபுறமும் தலா இரண்டு மதகுகளுடன் நான்கு கதவணைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி