ஒன்றரை வயது பெண் குழந்தை கால்வாயில் விழுந்து உயிரிழந்த சோகம்

0பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில், சேது-சங்கீதா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் தர்ஷினி, வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் தேடியபோது, வீட்டின் அருகிலுள்ள மாங்குளம் கால்வாயில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டார். குழந்தையை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் அருகிலுள்ள கால்வாயில் விழுந்து மூச்சுத்திணறி குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி