சட்டவிரோத குடிநீர் ஆலைகளை அரசு அப்புறப்படுத்த வலியுறுத்தல்.

0பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நல்லூர் ஊராட்சியில் சட்டவிரோதமாக இயங்கும் குடிநீர் ஆலைகளால் நிலத்தடி நீர் மாசுபட்டு, கிராம மக்களுக்கு சிறுநீரகக் கோளாறு, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆலைகளை அகற்றக் கோரி கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி