பொன்னேரி: வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் போராட்டம்

868பார்த்தது
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று (பிப்.19) முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடும் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.