திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த லிங்கப் பையன் பேட்டை கிராமத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி மஞ்சுளா, நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபரால் வீட்டில் புகுந்து தாக்கப்பட்டார். அவரது கம்பல், மூக்குத்தி பறிக்கப்பட்டு, கழிவறைக்குள் தள்ளப்பட்டார். மர்ம நபர் பித்தளை சாமான்களையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் தேடியபோது, மூதாட்டி கழிவறைக்குள் சடலமாக கிடந்தார். காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கழிவறையில் விழுந்து இறந்தாரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.