100 நாள் வேலைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெண்கள் முற்றுகை

0பார்த்தது
100 நாள் வேலைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெண்கள் முற்றுகை
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் சோமணஞ்சேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க மறுத்து வருவதாகக் கூறி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டு முடியும் தருவாயில் வெறும் 20 நாட்கள் பணிகூட வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் வஞ்சித்து வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி