திருத்தணி பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது

1097பார்த்தது
திருத்தணி பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (48) தனது மனைவியுடன் திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறியபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி செல்போன் திருடிய நபரை பயணிகள் கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ஆந்திர மாநிலம் நகரி அருகே காக்கவேடு கிராமத்தைச் சேர்ந்த சாய் (25) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி