திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் சரஸ்வதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை அவரது சட்டையில் இருந்த ரத்தக்கறை அடையாளத்தை வைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், புதிய செல்போன் வாங்கிய வெங்கடேசன், அதன் இஎம்ஐ கட்ட முடியாமல் அவதிப்பட்டு, செல்போனை உடைத்து விட்டதாகவும், மீண்டும் செல்போன் வாங்க பணம் இல்லாததால் சரஸ்வதியை கொலை செய்து நகை திருடியதும் தெரியவந்துள்ளது.