
கடம்பத்தூர்: மதுபோதையில் கத்தியுடன் மிரட்டல்.. 3 பேர் கைது
கடம்பத்தூர் எஸ்ஐ சிங்காரவடிவேல் மற்றும் காவலர்கள் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிஞ்சிவாக்கம் கூவம் ஆற்றுப்பாலம் அருகே 3 பேர் மதுபோதையில் கத்தியுடன் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்ட காவலர்களையும் ஆபாசமாகப் பேசி, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் சீனிவாசன் (19), உஸ்மான் (22) மற்றும் ஹேராம் (23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.








































