தேர் பவனி: திரளானோர் பங்கேற்பு

3பார்த்தது
தேர் பவனி: திரளானோர் பங்கேற்பு
திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவ விழா மே 28 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி – பூதேவி உற்சவர் பவள வண்ண பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். மேள தாளங்கள் இசைக்க, ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழங்கியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெண்கள் கோலாட்டம், சிறுவர்கள் சிலம்பாட்டம் மற்றும் பெருமாள், ஸ்ரீ தேவி – பூதேவி, கருடன் உள்ளிட்ட வேடமணிந்தவர்கள் அணிவகுத்து தேரை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி