புழல் பகுதியில் வசித்து வந்த வாய் பேசவும் கேட்கவும் இயலாத மகேந்திரன் (28), கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காணாமல் போன நிலையில், அவரது நண்பர்கள் லாரன்ஸ் மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் அவரை கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசியதாக கூறப்படுகிறது. மகேந்திரனுக்கும் லாரன்ஸின் மனைவி வசந்திக்கும் ஏற்பட்ட கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மகேந்திரன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.