திருவள்ளூர் மாவட்டம் சிவன் வாயல் கிராமத்தில், மின்கம்பங்கள் நடுவதற்காக எவ்வித அனுமதியுமின்றி ஏரிக்கரை ஓரம் இருந்த 10 பனை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த மின்வாரிய ஊழியர்களின் செயல் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து சிவன் வாயல் ஊராட்சி கசவம்பேடு விவசாயி மோகன், மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் புகார் மனு அளித்து, வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களின் படங்களைக் காண்பித்து தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார். உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் விவசாயியிடம் உறுதி அளித்தார்.