விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று (9ஆம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை குழுவின் தடை காரணமாக ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட த.வெ.க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.டி. மணி தலைமையில், திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு அம்மனிடம் வேண்டிக்கொண்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தடங்கல்கள் வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.