மீஞ்சூரைச் சேர்ந்த சதீஷ்(34) மற்றும் அவரது மகன் சைலேஷ்(6) ஆகியோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் பைக்கில் வீடு திரும்பும்போது, சோழவரம் அடுத்த நல்லுார் அருகே எதிர்பாராத விதமாக பைக் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.