ஊத்துக்கோட்டை: நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் - இருவருக்கு குண்டாஸ்

60பார்த்தது
ஊத்துக்கோட்டை: நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் - இருவருக்கு குண்டாஸ்
ஊத்துக்கோட்டையில் 2 நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கடந்த மாதம் 17-ஆம் தேதி ஆகாஷ்(18) மற்றும் ஜானகிராமன்(20) ஆகியோர் காணாமல் போன வழக்கில் அவர்களது நண்பர்களே கொன்று புதைத்தது தொடர்பாக நல்லபாண்டி என்பவர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் 17-வது சிறுவன் ஆகியோரை கைது செய்த 2 பேரை சிறையில் அடைத்து சிறுவனை சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்த நிலையில், உடல்களை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக நல்லபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவள்ளூர் எஸ்பி விவேகானந்தா சுக்லா பரிந்துரையின்படி திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி