காஞ்சி: கஞ்சா கடத்திய வாலிபர் அதிரடி கைது

0பார்த்தது
காஞ்சி: கஞ்சா கடத்திய வாலிபர் அதிரடி கைது
பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த சிவரஞ்சன் (30) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த இவர், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பூந்தமல்லி பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி