திருவள்ளூர் மாவட்டம், புழல் அடுத்த கதிர்வேடு, பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராம் இவர் டெய்லராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி நரசம்மா (42) இவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களது மகள்கள் இருவர் அவர்கள் விருப்பம்போல் திருமணம் செய்துகொண்டதால் மனவிரக்தியில் இருந்த நரசம்மா நேற்றிரவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குத் தூங்கச் சென்றார். விடியற்காலை தனது கணவர் மனைவியைக் காணாமல் தனது வீட்டின் மேல் அறைக்குச் சென்று பார்த்ததில் அங்கு மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த புழல் போலீசார் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றுவந்து சடலத்தைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.