திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை புதிய கடை திறப்பதாக கூறி அங்கு அதனை திறக்கக் கூடாது பெண்கள் பணிக்கு செல்பவர்கள் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி மதுபான கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் செங்குன்றம் காவல்துறையினர் சமரசம் மேற்கொண்டு மறியல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்றும் மதுக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் தான் தற்போது நடைபெற்று வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் கிராம மக்கள் சென்று புதிதாக திறக்கப்பட உள்ள கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர். புதிதாக கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.