போதையில் கல்லை போட்டு கொலை: வாலிபர் கைது

0பார்த்தது
போதையில் கல்லை போட்டு கொலை: வாலிபர் கைது
திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் நேற்று மாலை கூலி தொழிலாளி சீனிவாசன் (35) நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, போதையில் வந்த ஆகாஷ் (20) தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், நேற்று இரவு கடற்கரையில் உறங்கிக்கொண்டிருந்த சீனிவாசன் மீது கல்லை வீசி கொலை செய்தார். போலீசார் ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி