தன் மீது அவதூறு பரப்பும் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்னேரி காவல் நிலையத்தில் பாஜக மாவட்டச் செயலாளர் ராஜினி என்பவர் கட்சிப் பிரமுகர்களுடன் சென்று புகார் அளித்துள்ளார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை நிகிதாவுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன் மீது வேண்டுமென்றே அவதூறு ஏற்படுத்துவதாகவும், செந்தில்வேல் என்பவர் சமூக வலைதளத்தில் பரப்பியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜினி புகார் அளித்துள்ளார்.