திருவேற்காடு: உலர்பழ கிடங்கில் தீ விபத்து; ரூ.1 கோடி பொருள் நாசம்

1பார்த்தது
திருவேற்காடு: உலர்பழ கிடங்கில் தீ விபத்து; ரூ.1 கோடி பொருள் நாசம்
திருவேற்காடு அடுத்த நுாம்பல் கிராமத்தில், 54 வயதான சுனில் குமார் நடத்தி வந்த 'நட்ஸ் அண்ட் ஸ்பைஸ்' என்ற உலர் பழங்கள் கிடங்கில், நேற்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 36 தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி