கார் மீது லாரி மோதி விபத்து: மூன்று பேர் படுகாயம்

0பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் எதிரே, சென்னை நோக்கிச் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியதுடன், காரில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி