ஊத்துக்கோட்டை: 550 போதை மாத்திரைகள் பறிமுதல்; மூவர் கைது

558பார்த்தது
ஊத்துக்கோட்டை: 550 போதை மாத்திரைகள் பறிமுதல்; மூவர் கைது
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் கலைஞா் நகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த சாருக்கான் என்ற சாகுல் அமீது (21), அஸ்வின் (19), ஹரீஷ் நாராயணன் (25) ஆகிய மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 550 போதை மாத்திரைகள் மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி