
காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி என்பவர் தொடர்பு கொண்டு மதுரவாயல் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்றும் கூறி இணைப்பைத் துண்டித்தார். உடனடியாக மதுரவாயல் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இது ஒரு புரளி எனத் தெரியவந்தது. போலீசார் பூபதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





































