அம்பத்தூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

52பார்த்தது
அம்பத்தூர் பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2024 ஆம் ஆண்டு மாயமானார். சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட பின் பாலியல் தொல்லை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பாடி பகுதியைச் சேர்ந்த மகாத் (27) கைது செய்யப்பட்டார். போக்சோ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகள், பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டுகள், மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் என மொத்தம் 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி