சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் நீர்த்தேக்கத்தில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி 200 கன அடி உபரி நீர் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2954 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1115 கன அடியாகவும், குடிநீருக்காக 184 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கால்வாயில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.