பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் சிக்னல் அருகே இன்று பிற்பகல் பலத்த காற்றுடன் மழை பெய்த போது மாடியில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் அடியோடு சாய்ந்தது. பேனர் கம்பி நிற்பதற்காக போடப்பட்டிருந்த கான்கிரீட் கலவைகள் பெயர்ந்து பின்னால் இருந்த வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் உள்ளே இருந்த மேற்கூரை பூச்சி பெயர்ந்து சேதமடைந்து கீழே விழுந்ததில் வீட்டில் இருந்த நபரின் தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. 15 தையல்கள் போடப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் வானகரம், சிவபூதமேடு பஜனை கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வயது 45 தலையில் விழுந்ததில் நடுமண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உறவினர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வானகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேனர்கள் வைக்க கூடாது என உத்தரவு உள்ள நிலையில் உரிய அனுமதியின்றி சில தனியார் நிறுவனங்கள் விளம்பரத்திற்கு இதுபோன்ற பேனர்கள் வைப்பதால் கீழே சாய்ந்து விபத்து ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு காயங்களும் ஏற்படுகிறது. இந்த பேனர்களை அரசு அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.