செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டிய அரசுப் பேருந்துகள், ஓட்டுநர்களின் அலட்சியத்தால் ஜிஎன்டி சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரிக்கின்றன. இது குறித்து போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.