திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தில் விவசாயி மாணிக்கம் (60) மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி (53) ஆகியோர் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது, வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 30,000 ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.