தண்டையார்பேட்டை சௌந்தரப்பாண்டி பள்ளி அருகே நீண்ட நாட்களாக இருக்கும் குழாய் காரணமாக பள்ளி மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலை, மாலை நேரங்களில் சாலையைக் கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் உடனடியாக குழாயை அப்புறப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள பிரச்சனை.