அயப்பாக்கம் ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 2016-17 நிதியாண்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், போதிய பராமரிப்பு இன்றி புதர் மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இது அப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு தலமாக இருந்த நிலையில், தற்போது அதன் அவலநிலை குடியிருப்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.