கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 2007-08ல் கட்டப்பட்ட பேருந்து நிலையம், 18 ஆண்டுகளாகியும் எவ்வித பராமரிப்பு இன்றி உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க. எம்.பி. கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ஆதிசேஷன் நிதியில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு இல்லாததால், பயணிகள் எந்த வசதியும் இன்றி அவதிக்குள்ளாகின்றனர்.