திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம், காட்டூர் சாலையில் பாலம் கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் வீடுகளை அகற்றுவது குறித்து கோரிக்கை தெரிவிக்க வந்த பொதுமக்களை, மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் காவலர்கள் தடுத்து அனுப்பியதால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அரியன் வாயில் பகுதியில் சாலை மற்றும் மின்விளக்கு வசதி இல்லாதது குறித்தும் புகார் அளிக்க வந்த மக்களையும் ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுத்ததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.