கும்மிடிப்பூண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கரின் திருவுருவப்படத்தை மீண்டும் நீதிமன்றத்தில் வைக்கும் வரை போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எதிராக திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.